நாமக்கல்லில் ரூ. 61.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் நேற்று 2675 மூட்டை பருத்தி ரூ. 61.50 லட்சத்துக்கு ஏலம் போனது.
நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 61.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. இங்கு வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 2,675 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். அந்த வகையில், மொத்தம் 2,675 மூட்டை பருத்தி வரத்து இருந்தது.
இதில், RCH ரகம் ரூ. 5,500 முதல் ரூ. 7,489 வரையிலும், TCH ரகம் ரூ. 7,500 முதல் ரூ. 8,125 வரையிலும், மட்ட ரகம் ரூ. 3,999 முதல் ரூ. 6,400 வரையிலுமாக மொத்தம் ரூ. 61.50 லட்சத்துக்குப் பருத்தி ஏலம் போனது.