நாமக்கல்: திருநங்கைகளுக்கு வரும் 21ல் சிறப்பு முகாம்!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு வரும் 21ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Update: 2024-06-12 11:53 GMT
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு ஜூன் 21-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. திருநங்கைகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஒரே இடத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாகவும், பிற துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாகவும் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கிட சிறப்பு முகாம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற ஜூன் 21 அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான அரசு ஆவணங்களை பெற்று பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.