நீட் தேர்வில் நாமக்கல் ஸ்ரீ சைதன்யா மாணவர்கள் சாதனை!
இந்தியாவில் ஆண்டுதோறும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஸ்ரீ சைதன்யா கல்வி குழுமம் 39 வருடங்களாக NEET, IIT, JEE போன்ற நுழைவுத் தேர்வுகளுக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை மருத்துவத்துறையிலும் பொறியியல் துறையிலும் முதலிடம் பெறச்செய்தும் வருகிறது.
இவ்வாண்டு நடைபெற்ற NEET நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் 9 மாணவர்கள் 720/720 மதிப்பெண்களைப் பெற்றுச் சாதனைகளைக் குவித்துள்ளனர்.
மேலும் 700 மதிப்பெண்களுக்கு மேல் 132 மாணவர்களும் 650 மதிப்பெண்களுக்கு மேல் 852 மாணவர்களும் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
மேலும், ஶ்ரீ சைதன்யா பள்ளி குழுமத்தின் நாமக்கல் கிளை தொடங்கிய முதல் ஆண்டிலேயே அந்த பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் கபில் (660) துர்கா ஸ்ரீ (642) திவ்ய பிரியதர்ஷினி (627), பரத் யோகின் (616), சுபஸ்ரீ (615), சைலேஷ் (600) மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்த மாணவ, மாணவிகளுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நாமக்கல் சைதன்யா பள்ளி வளாகத்தில் நடந்தது.
தேர்வு எழுதிய மாணவர்களுள் 60 விழுக்காடு மாணவர்களுக்கு மேல் தமிழ்நாட்டில் தலைசிறந்த மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு ஸ்ரீ சைதன்யா குழுமத்தின் இயக்குனர் சுஷ்மா போப்பண்ணா தமது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீ சைதன்யா குழுமத்தின் பொது மேலாளர் ஹரிபாபு (DGM), துணை பொது மேலாளர் வெங்கட கிருஷ்ண ரெட்டி (AGM), NEET அகாடமியின் நாமக்கல் வட்டார பொறுப்பாளர் சத்தியவரதன் (ZD), மண்டல பொறுப்பாளர்கள் காமேஸ்வர ராவ் (RI), பொன்னையா சௌத்ரி (RI), சேலம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தனசேகரன், நாமக்கல் பள்ளி முதல்வர் கார்த்திகேயன், உயர்நிலைப்பள்ளி முதல்வர் சுபாஷினி ஆகியோர் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.