நாமக்கல்: போக்குவரத்து கழக ஊழியர் சங்க வாயிற் கூட்டம்
தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடவும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
நாமக்கல்லில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு சிஐடியு சார்பில் கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு உதவி தலைவர் எம்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் என்.வேலுசாமி, பொதுச் செயலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத்தொகையை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கி வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வையும், ஒப்பந்த பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடவும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கவும் வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சிஐடியு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.கிளைச் செயலாளர் ஆர்.பெரியசாமி நன்றி கூறினார்.