நாமக்கல்: மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு!
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Update: 2024-06-22 14:00 GMT
மத்திய இணை அமைச்சராக 2 வது முறை பொறுப்பேற்ற பிறகு சொந்த மாவட்டமான நாமக்கல்லுக்கு வருகை தந்த எல்.முருகனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த மத்திய தகவல்- ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகனுக்கு நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாமக்கல் உழவர் சந்தை அருகே பட்டாசு வெடித்தும், அவருக்கு மாலைகள் அணிவித்தும், பொன்னாடைகள் அணிவித்தும், மகளிர் அணி சார்பில் ஆரத்தி எடுத்தும் மத்திய அமைச்சரை வரவேற்றனர். முன்னதாக, நாமக்கல் K.புதுப்பாளையத்தில் உள்ள நந்தகோபால சுவாமி கோயில், நாமக்கல் நரசிம்மர்-ஆஞ்சநேயர் சுவாமி ஆகிய திருக்கோவில்களில் அமைச்சர் முருகன் சுவாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்வின் நகர பா.ஜ.க தலைவர் சரவணன், கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி,மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், மாவட்ட செயலாளர் ராம்குமார் மற்றும் மாவட்ட, நகர ஒன்றிய பாஜகவினர் உடன் இருந்தனர்.