முத்து சாய் கிரீடம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் நம்பெருமாள்

Update: 2023-12-16 09:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து வைபவத்தின் 4-ம் நாளான இன்று " கண்ணனெனும் கருந் தெய்வம்" பாசுரத்திற்கு ஏற்ப நம்பெருமாள் முத்து சாய் கிரீடம், ரத்தின காது காப்பு, ரத்தின அபயஹஸ்தம்,பங்குனி உத்திர பதக்கம், சந்திரகலா, பருத்திப்பூ பதக்கம், நகரி, ஆறு வட முத்துமாலை, காசு மாலை, அடுக்கு வைர மகர கண்டிகை பதக்கங்கள், வைர ரங்கூன் அட்டிகை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து பின் சேவையாக , புஜ கீர்த்தி, அண்ட பேரண்ட பக்ஷி வெண் பட்டுத்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நம்பெருமாள் புறப்பாடின் போது ரங்கப்பிரபு ரெங்கநாதா என்று பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கோஷங்களை எழுப்பினர். பகல் பத்து விழா நான்காம் நாளான இன்று நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார் . பின்னர் இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சேர்கிறார். வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் வருகின்ற 22ஆம் தேதியும் - வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற 23ஆம் தேதி சனிக்கிழமையும் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News