நாம்தமிழர் கட்சி குமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரியஜெனிபர்

நாம்தமிழர் கட்சி குமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரியஜெனிபர் என்பவரை அறிவித்துள்ளது.

Update: 2024-01-28 15:15 GMT
மரிய ஜெனிபர்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர்  அறிவிக்கப்பட்டுள்ளது. மரிய ஜெனிஃபர் என்பவரை வேட்பாளராக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.      

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மரிய ஜெனிஃபர் மாதவபுரத்தை சேர்ந்தவர். 1981 அக்டோபர் 14ஆம் தேதி பிறந்தவர். மீனவர் சமுதாயத்தை சேர்ந்த இவர் எம்.பி.ஏ பட்டதாரி ஆவார்.       

இவர் 14 ஆண்டுகள் மஸ்கட் அமீரகத்தில் தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது திருமணம் காதல் திருமணம் ஆகும். கணவர் கன்னியாகுமரி,  சுவாமிநாதபுரத்தை சேர்ந்த தீபக் சாலமன். கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.        

தீபக் சாலமன் தற்போதும் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் குளோபல் மேனேஜராக பணியாற்றி வருகிறார். மரிய ஜெனிபர் அமீரகத்தில் 2014 முதல் நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளில் இருந்துள்ளார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். குழந்தைகள் துபாயில் படித்து வருகின்றனர்.

Tags:    

Similar News