நரசிம்மர் ஜெயந்தி விழா : திரளான பக்தர்கள் தரிசனம்
முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான லெட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்மர் ஜெயந்தி விழா நடந்தது.
Update: 2024-05-23 13:51 GMT
தூத்துக்குடி மாவட்டம், முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான லெட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்மர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டது. ராமவிநாயகர், சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர், லெட்சுமி நரசிம்மர், பைரவருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது.
தொடர்ந்து லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு யாகம், விசேஷ திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து கோஷ்டி பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பத்மநாபன் சுவாமி, சேசப்பன் சுவாமிகள், வெங்கடேஷ்வாமி, சேகர் சுவாமி, நம்மாழ்வார் சுவாமி, சுவாமிநாதன், செல்லப்பா, முருகன், செல்லக்குட்டி, பண்டாரம், தச்சநல்லூர் ஆண்டாள் கோஷ்டிகள், வி.எம்.சத்திரம் சோமசுந்தரம், அறங்காவலர் காமராசு, வள்ளிநாதன், சுடலைமணி, மும்பை மாயாண்டி, உலகநாதன் உள்பட ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.