நரசிம்மர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
குமாரபாளையத்தில் நரசிம்மர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
Update: 2024-05-23 12:36 GMT
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை, மகேஸ்வரர் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி விழாவையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு லட்சுமி நரசிம்மர் சுவாமிகள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள மங்களாம்பிகை, மகேஸ்வரர், சவுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கால பைரவர், தட்சிணாமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், கல்யாண விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடினார்கள். சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. வழி நெடுக பக்தர்கள் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.