பெரியார் பல்கலைக்கழகத்தில் போதை பொருட்கள் விழிப்புணர்வு கூட்டம்
பெரியார் பல்கலைக்கழகத்தில் போதை பொருட்கள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரியார் பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பத்மசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓமலூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கீதா கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் தற்போது நிகழும் குற்ற சம்பவங்களில் 95 சதவீத நிகழ்வுகளுக்கு மது, கஞ்சா போன்ற போதை பொருட்களை உட்கொள்வதால் தான் நடைபெறுகிறது என்றும், சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை ஒழிக்கும் மிகப் பெரிய பொறுப்பு இளைஞர்களான உங்களுக்கு உள்ளது.
மேலும் உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நண்பர்கள் இதுபோன்ற போதை பழக்கங்களில் ஈடுபடுவது தெரிந்தால் உடனடியாக அவர்களுக்கு உரிய உளவியல் நிபுணர் மூலம் ஆலோசனை வழங்கி போதைப் பழக்கத்தில் இருந்து மீட்க தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்றும் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பேராசிரியர்கள் கல்யாணசுந்தர், அழகிரிசாமி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.