தேசிய டெங்கு ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
ஆரணியில் தேசிய டெங்கு ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-05-17 05:09 GMT
உறுதிமொழி ஏற்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் தேசிய டெங்கு தின ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நகராட்சி ஆணையாளர் ஏ.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி சுகாதார தனி அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர் வடிவேல், கள ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் களப்பணியாளர்கள் ,சுகாதார பிரிவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.