“தேசிய பெண் குழந்தை தினம் - மாநில அரசின் விருது” - ஆட்சியர் தகவல்

ஜனவரி 24-ல் “தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில அரசின் விருது” - தகுதியுடையோர் விண்ணபிக்க ஆட்சியர் தகவல்

Update: 2023-12-19 16:56 GMT

ஜனவரி 24-ல் “தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில அரசின் விருது” - தகுதியுடையோர் விண்ணபிக்க ஆட்சியர் தகவல்

“தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் மாநில அரசின் விருது” – 2023-24ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உடன் விண்ணப்பிக்கலாம் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விருதுக்கு தகுதிகளாக 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் (31 டிசம்பர் -ன் படி)  பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல். பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு. பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல். வேறு ஏதாவது வகையில் சிறப்பான /தனித்துவமான சாதனை செய்திருத்தல். பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல்.

 ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல், சாதனை புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரினை 31.12.2023–க்குள் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் கருத்துருவினை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்.233,234 கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவலுக்கு மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்.04286-299460-ஐ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News