தேசிய கிக் பாக்சிங் போட்டி

பாக்சிங்கில் தங்க பதக்கம் வென்ற 5 வீரர்களும், 2025, ஜனவரியில் புதுடில்லியில் நடக்கவுள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Update: 2024-06-18 04:57 GMT

பாக்சிங்கில் தங்க பதக்கம் வென்ற 5 வீரர்களும், 2025, ஜனவரியில் புதுடில்லியில் நடக்கவுள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


தேசிய அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் ஜூன் 10 - 14 வரை நடந்தது. இதில் 16 - 18 வயதுடைய ஜூனியர் பிரிவினருக்கு, பாயின்ட் பைட்டிங், லைட் கான்டாக்ட், கிக் லைட், லோ கிக் உள்ளிட்ட பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த 600க்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியில் தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில் சிறுவர் - சிறுமியர் என, 45 வீரர்கள் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரம் மாவட்டம், ஒன்மேன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த தர்ஷன், 16, பேன் பிரைசன், 16, பிரகதீஷ்வரன், 16, ஆகியோர் 'லோ கிக்' பிரிவிலும், தரணிதரன், 17, வசீம் ரபீக், 17, ஆகியோர், லைட் கான்டாக்ட் பிரிவிலும் தங்கம் வென்று, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

மேலும், முதல் முறையாக காஞ்சியில் இருந்து சென்ற 5 வீரர்களும், தேசிய அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் ஜூனியர் பிரிவு போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. தங்க பதக்கம் வென்ற 5 வீரர்களும், 2025, ஜனவரியில் புதுடில்லியில் நடக்கவுள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ளனர் என, காஞ்சிபுரம் பயிற்சியாளர் கணேஷ் செயலர் அருண் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News