தேசிய அளவிலான சிலம்பம்: மாணவ, மாணவிகள் சாதனை

தேசிய அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2024-05-10 09:56 GMT

தேசிய அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.


தேசிய அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். தென்னிந்திய பராம்பரிய சிலம்ப விளையாட்டுக் கழகம் சார்பில் காஞ்சிபுரத்தில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில் மாநில அளவில் வெற்றி பெற்ற 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, வாள்வீச்சு, வேல் கம்பு, தொடுமுறை போன்ற போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்ட தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டுக் கழகம் சார்பில் 10 பேர் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, வேல்கம்பு போட்டிகளில் பங்கேற்று, 5 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணன், தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கழக மாநிலத் தலைவர் ரேணுகோபால், துணைத் தலைவர் மில்டன், கள்ளக்குறிச்சி மாவட்ட பயிற்சியாளர் சூரியமுர்த்தி ஆகியோர் மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினர்.

Tags:    

Similar News