தேசிய அளவிலான சிலம்பம் போட்டியி
சங்ககிரி: தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-13 16:38 GMT
சங்ககிரி
கேரள மாநிலம், ஆலப்புழாவில் சிலம்பம் விளையாட்டுச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிறப்பு சிலம்பம் போட்டியில் சங்ககிரி ஆர்.எஸ். குதியைச் சேர்ந்த அகத்தியர் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடத்தின் சார்பில் தலைமை பயிற்சியாளர் சுரேஷ், பயிற்சியாளர்கள் கவினேஷ், தங்கராசு ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் 7 பேர் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு உள்ளிட்ட சிலம்பம் போட்டியில் பங்கேற்று விளையாடினர்.
அதில் சங்ககிரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேசிய அளவில் இரண்டு பேர் முதலிடத்திலும், நான்கு பேர் 2வது இடத்திலும், ஒருவர் 3ம் இடத்திலும் வெற்றி பெற்றனர்