கள்ளக்குறிச்சியில் தேசிய மக்கள் நீதிமன்றம்
கள்ளக்குறிச்சியில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-10 16:24 GMT
தேசிய மக்கள் நீதிமன்றம்
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத்திற்கு, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை தாங்கினார்.
நீதிபதிகள் கீதாராணி, மைதிலி, தனசேகரன், முகமது அலி, சுகந்தி, ஹரிஹர சுதன் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் சீனிவாசன் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இதில் 754 வழக்குகளுக்கு 8 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரத்து 925 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.