திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாட்டப்பட்டது.
திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பாக தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
இந்திய இயற்பியலாளர் சர் சி.வி ராமன், ராமன் விளைவைக் கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதி இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது . அந்த வகையில், திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) கணிதவியல் துறை சார்பாக தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணாநிதியின் வழிகாட்டுதலின்படி, விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் டாக்டர் குப்புசாமி, ஆராய்ச்சி இயக்குனர் R.பாலகுருநாதன், தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இத்தினத்தை சிறப்பிக்கும் வகையில் விழாவில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து, உலகத்தரம் வாய்ந்த சதுப்புநில ஆராய்ச்சி விஞ்ஞானி (WORLD CLASS SCIENTIST IN MANGROVE) பேராசிரியர் முனைவர் K. கதிரேசன் கலந்து கொண்டு உரையாற்றினார். இவ்விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் பயன்பாட்டு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் அறிவியல் துறையைச் சேர்ந்த மாணவிகள், அறிவியல் சம்பந்தமான வரைபடக் கோட்பாடு, திரவ இயக்கவியல், செயல்பாட்டுக் கோட்பாடு, முப்பரிமாணக் கோட்பாடு, வகை மற்றும் தொகை நுண்கணிதப் பயன்பாடு, நிகழ்தகவுக் கோட்பாடு ஆகிய கோட்பாடுகளைக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் தொடர்பான ஆய்வு மாதிரிகளைக் காட்சிப்படுத்தினார்கள்.
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கல்லூரி மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவியல் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கோப்பைகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட கணிதவியல் மற்றும் அறிவியல் துறையைச் சார்ந்த மாணவிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் துணை முதல்வர் G.மேனகா, தேர்வாணையாளர் டாக்டர் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை கணிதவியல் துறைத் தலைவி முனைவர் S.ரமாதேவி ஏற்பாடு செய்திருந்தார்.