தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 53வது தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது

Update: 2024-03-15 01:08 GMT

தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் 53வது தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் மார்ச் 4 முதல் 11 வரை  நடைபெற்றது. இதில்,கட்டுரைப் போட்டி, சூலோகன் எழுதும் போட்டி மற்றும் ஒவியப் போட்டி போன்ற பல்வேறுப் போட்டிகள் துறைமுக ஊழியர்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் துறைமுக உபயோகிப்பாளர்களுக்கும் நடைபெற்றது. 

மேலும் துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வின் அவசியத்தை அறிவுறுத்தும் வகையில் பிரசுரங்கள், பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள், தலைகவசம் அணிதல் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.  துறைமுக ஆணையம் தலைவர் சுசந்த குமார் புரோகித், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். போக்குவரத்து மேலாளர் ஆர். பிரபாகர் வரவேற்புரை வழங்கி, பாதுகாப்பு ஆண்டறிக்கையினை’  வாசித்தார். பாதுகாப்பு துறை   துணை இயக்குநர்  பிரிஜேந்திர குமார், வாழத்துரை வழங்கினார்.

விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற துறைமுக ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ‘பாதுகாப்பு’ என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவியர்கள் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில்  மூத்த துணை போக்குவரத்து அதிகாரி டி. ரமேஷ்,   நன்றியுரை வழங்கினார்.

Tags:    

Similar News