தனியார் கல்லூரியில் கணினியல் தேசிய கருத்தரங்கம்
சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினியல் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சூசைபுரம் Vilavankode, St. Alphonsa College of Arts and Sciences, Computer Science, Seminarகணினி அறிவியல் துறை சார்பாக "பெரும் தரவியல் பகுப்பாய்வு" என்கிற பொருண்மையில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ் தலைமை தாங்கிப் பேசினார். கருத்தரங்க துவக்கவுரையைக் கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் மைக்கேல் ஆரோக்கியசாமி எஸ்டிபி ஆற்றினார்.
வரவேற்புரையை கணினி அறிவியல் துறை பேராசிரியர் பெகின் வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாகத் திருவனந்தபுரம் மார் பசலியஸ் பொறியியல் கல்லூரி பேராசிரியர் அனில், திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகக் கணக்கீட்டு உயிரியல் மற்றும் உயிர்த் தரவில் துறைத் தலைவர் பேராசிரியர் அச்சுத் சங்கர் நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். 'கணினியலில் எந்திரக் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்துத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களைக் கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் சனல் அவர்கள் அறிமுகப்படுத்தி பேசினார். கல்லூரி ஆன்மீக வழிகாட்டி அருட்தந்தை அஜின் ஜோஸ், துணை முதல்வர் முனைவர் ஆர் சிவனேசன் ஆகியோர் கருத்தரங்கை வாழ்த்திப் பேசினர். இக்கருத்தரங்கை ஒட்டி கணினி அறிவியல் சார்ந்த போட்டிகள் நடைபெற்றன.