தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா - சேலம் மாணவர் தேர்வு

டெல்லியில் நடக்கும் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்க சேலம் மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2024-03-03 04:08 GMT

அரவிந்த் 

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் 5-வது பதிப்பு நிகழ்ச்சி வருகிற 5 மற்றும் 6-ந் தேதியில் புதுடெல்லியில் நடைபெறுகிறது. அங்குள்ள சம்விதன் சதன் மைய மண்டபத்தில் நடக்கும் இந்த விழாவில், நேரு யுவகேந்திரா சங்கத்தின் மூலம் மெய்நிகர் முறையில் நடத்திய மாநில இளைஞர் நாடாளுமன்ற போட்டியின் மூலம் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

மாவட்ட அளவிலான போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 65 இளைஞர்கள் மாநில அளவிலான போடடியில் பங்கேற்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியை சேர்ந்த பரதன் மகன் பி.அரவிந்த் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்தார். இதன்மூலம் புதுடெல்லியில் நடைபெறும் தேசிய நிகழ்வில் சேலம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் மற்றும் 3-ம் இடங்களை பெற்றவர்களுடன் அரவிந்த் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News