நத்தக்காடையூர் சைக்கிள் ஸ்டாண்ட் ரூ. 3.17 லட்சத்துக்கு ஏலம்
காங்கேயம் நத்தகாடையூரில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் விடப்பட்டது இந்த ஏளமனது காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. நத்தக்கடையை சேர்ந்தவர் 3 லட்சத்து 17 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்
Update: 2024-03-04 07:34 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தக்காடையூர் பகுதியில் இயங்கி சைக்கிள் ஸ்டாண்டின் கடந்த 2023 முதல் 2024ஆம் ஆண்டிற்கான குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் தற்போது 2024 முதல் 2025 ஆம் ஆண்டிற்கான ஏலம் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த மாதத்தில் சுமார் இரண்டு முறை சைக்கிள் ஸ்டாண்ட்கான ஏலம் தடைபட்டது. இதனை அடுத்து நேற்று மூன்றாவது முறையாக நத்தகாடையூர் பகுதி சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகை ஏலம் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலாதேவி தலைமையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுமார் 5 பேர் கலந்து கொண்டு ஏலம் கோரினர். கடைசியாக நத்தகாடையூர் பகுதியை சேர்ந்தவர் ரூ. 3 லட்சத்து 17 ஆயிரத்து 730க்கு நத்தகாடையூர் சைக்கிள் ஸ்டாண்டை ஏலத்தில் எடுத்தார்.