இயற்கை உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகத்தில் இயற்கை உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2023-12-26 03:18 GMT
இயற்கை உணவு விழிப்புணர்வு
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகத்தில் பொதிகை வாசகர் வட்டம் சார்பில் யோகா, இயற்கை உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில் வாசகர் வட்ட துணைத் தலைவர் மைதீன் பிச்சை தலைமை வகித்தார். பொதிகை வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், கோ. சிவராமசுப்பிரமணியன், தொடக்கப் பள்ளி பி.எல்.டபிள்யு.ஏ. முன்னாள் தலைமையாசிரியர் அன்பு வல்லவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற நடத்துநரும் யோகா ஆசிரியருமான ஏ. இளங்கோ பேசினார். யோகா மாணவர்கள் பல்வேறு பயிற்சிகளை செய்து காண்பித்தனர். யோகா மாணவர்களுக்கு நினைவு பரிசும் பங்கேற்ற அனைவருக்கும் சிறுதானிய இயற்கை உணவும் வழங்கப்பட்டன.