இயற்கை மூலிகை பூச்சி விரட்டி
மூலிகை பூச்சி விரட்டி வேளாண்துறை பரிந்துரை -வேளாண் அலுவலர் டிப்ஸ்.
By : King 24x7 Angel
Update: 2024-02-17 09:07 GMT
மூலிகை பூச்சி விரட்டி வேளாண்துறை பரிந்துரை -வேளாண் அலுவலர் டிப்ஸ் வயல்களில் உள்ள பூச்சிகளை விரட்ட, பெரும்பாலும் கெமிக்கல் பொருட்களை தான் பயன்படுத்துகிறோம். ஆனால், இயற்கையாக மூலிகை தயாரித்தும் விவசாய பயிர்களை பாதிக்கும் பூச்சி களை விரட்டலாம். அதற்கு, ஆடு, மாடு சாப்பிடாத எருக்கு, கற்றாழை, நொச்சி, ஊமத்தை, துளசி, சீதா, வேம்பு போன்ற இலைகளை இடித்து, ஒரு கிலோ சாணம், 20 லிட்டர் மாட்டு கோமியம் கலந்து பானையில், 7 நாட்கள் வைக்க வேண்டும். இவ்வாறு வைத்திருக்கும் கரைசல், 7 முதல் 10 நாட்களில் நொதித்து மூலிகை சாறு தயாராகி விடும். 7 நாட்களுக்கு பின், ஒரு லிட்டர் கரைசலுக்கு, 10 லிட்டர் தண்ணீர் கலந்து அனைத்து பயிர்களுக்கும் மூலிகை பூச்சி விரட்டி தெளிக்கலாம். இதன் மூலம் செடிகளிடம் பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சிகள் வராது.