தேசிய பசுமைப்படை மாணவா்களுக்கு இயற்கை சூழல் சுற்றுலா
நாமக்கல் மாவட்ட தேசிய பசுமைப்படை மாணவா்கள் சேலம் மற்றும் நாமக்கல்லில் உள்ள சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு 3 நாள் இயற்கை சூழல் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை சாா்பில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக நிதியுதவியுடன் தேசிய பசுமைப்படை மாணவ, மாணவிகளுக்கு இயற்கை சூழல் சுற்றுலாவிற்கு மூன்று நாட்கள் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனா்.
நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தேசிய பசுமைப்படையை சார்ந்த 50 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டு விழிப்புணர்வு பெரும் பொருட்டு 3 நாள் இயற்கை பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
நாமக்கல்லில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி, மலைக்கோட்டை, வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவ கல்லூரி கண்காட்சி மையம், அத்தனூர் வேளாண் விரிவாக்க மைய கண்காட்சியகம், அத்தனூர் மரக்கன்றுகள் உற்பத்தி மையம், பாச்சலில் உள்ள ஒரே கல்லிலான குதிரை சிலை போன்றவற்றை முதல் நாள் பார்வைக்கு விழிப்புணர்வு பெற்றனர். இரண்டாம் நாள் சேலம் பெரியார் பல்கலைக் கழகம், சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்கா, சேலம் அரசு அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு விழிப்புணர்வு அடைந்தனர்.
3 ஆம் நாள் கொல்லிமலை மலையற்ற பயிற்சி, மாசிலா அருவி, மாசி பெரியசாமி கோயில் உள்ளிட்ட கொல்லிமலையின் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டு விழிப்புணர்வு பெறுகின்றனர். சுற்றுலாவில் மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளா்த்தல், நெகிழி பை தவிா்த்தல், ஈர நிலத்தை பாதுகாத்தல், விதைப்பந்து தயாரித்தல், இயற்கை உரம் பயன்படுத்துதல் போன்றவற்றை விளக்கம் அளிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் சிறப்பாக செய்திருந்தார்.