ராசிபுரத்தில் ராம்ராஜ் ஷோரூம் புதிய கிளை திறப்பு விழா
ராசிபுரத்தில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் புதிய கிளை திறப்பு விழா;
By : King News 24x7
Update: 2024-03-10 14:45 GMT
ராம்ராஜ் ஷோரூம் புதிய கிளை திறப்பு விழா
ராம்ராஜ் ஷோரூம் புதிய கிளை திறப்பு விழா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ராம்ராஜ் காட்டன் கிளை ஷோரூம் துவங்க விழா ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் இரா.கவிதா சங்கர், அருள்மிகு காசி விநாயகர் இயற்கை நல்வாழ்வு மைய அருட்செல்வர் கை. கந்தசாமி, ரோட்டரி சங்க சாசனத் தலைவர் பாலசுப்பிரமணியம், ரிப்பன் வெட்டி கடையை துவங்கி வைத்தார்கள். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் மு.ஆ.உதயகுமார் முதல் விற்பனையை துவங்கி வைத்தார். விழாவில் பேசிய ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே .ஆர்.நாகராஜன் 1983 ஆம் ஆண்டு தங்களது முதல் ஷோ ரூம் துவங்கப்பட்டது என்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவே துவங்கப்பட்டதாகும் அந்த காலகட்டத்தில் இரண்டு ரூபாய் கூலி வழங்கி வந்த நிலையில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இரண்டு மடங்கு உயர்த்தி நான்கு ரூபாய் வழங்கியதாகவும் தற்போது 300க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளதாகவும் தமிழர்களின் பாரம்பரியத்தையும் நெசவாளர் வாழ்வாரத்தை கருதி தொடர்ந்து கிளைகளை திறந்து வருவதாகவும் தெரிவித்தார் மேலும் தங்களது நிறுவனத்தில் 15 ஆயிரம் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும் சுமார் 50,000 நெசவாளர்கள் ஈடுபட்டு உள்ளதாகவும் தங்களது விற்பனை தென்னிந்தியா முழுவதும் மட்டுமில்லாமல் வட மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே வேட்டிக்கென்று தனி முத்திரை பதித்து முதலிடத்தில் உள்ள ஒரே நிறுவனம் ராம்ராஜ் காட்டன் என தெரிவித்தார். இந்த கிளையில் காட்டன் வேஷ்டிகள், நறுமண வேட்டி, சுப முகூர்த்த வேட்டி, மயில் கல்வேட்டி, பட்டு வேட்டி, என வேட்டி ரகங்கள் ஏராளமாகவும் காட்டன் சட்டைகள், எம்ராய்டிங், சட்டைகள், கூல் காட்டன் சட்டைகள், சுப முகூர்த்த சட்டைகள்,பெண்களுக்கான காட்டன் சேலைகள், பட்டு புடவைகள் அதேபோல குழந்தைகளுக்கான வேட்டி சட்டைகள் என இடம் பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் ராசிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடை உரிமையாளர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.