நாசரேத் : துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

நாசரேத்தில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார், துணை ராணுவ த்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Update: 2024-04-02 01:29 GMT

கொடி அணி வகுப்பு

 தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19 ம்தேதி ஒரே கட்டமாக நடை பெறுகிறது. இதையொட்டி மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி தலைமையில் கொடி அணி வகுப்பு நடந்தது. கொடி அணி வகுப்பு பேரணியானது நாசரேத் சந்தி பஜாரில் இருந்து தொடங்கி பஸ் நிலையம், ரயில் நிலையம் வழியாக காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.  இதில் இன்ஸ்பெக்டர்கள் நாசரேத் ஜீன்குமார், சாத்தான்குளம் ஏசுராஜசேகரன், தட்டார்மடம் அனிதா, சப் இன்ஸ்பெக்டர்கள் சாத்தான்குளம் சுரேஷ்குமார், நாசரேத் வைகுண்ட தாஸ் உள்பட போலீசார், துணை ராணுவ த்தினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News