என்சிசி., மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி முகாம்
கந்தம்பாளையம் எஸ்.கே.வி கல்வி நிறுவனத்தில், என்சிசி., மாணவர்களுக்கு, அடிப்படை ராணுவ பயிற்சி முகாம் நடந்தது.;
கந்தம்பாளையம் எஸ்.கே.வி கல்வி நிறுவனத்தில், என்சிசி., மாணவர்களுக்கு, அடிப்படை ராணுவ பயிற்சி முகாம் நடந்தது.
திருச்செங்கோடு அருகே உள்ள கந்தம்பாளையம் எஸ். கே.வி கல்வி நிறுவனத்தில், - சேலம் தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் 8. 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் என் சிசி மாணவர்களுக்கான, 10 நாட்கள் அடிப்படை ராணுவ பயிற்சி முகாம் நடந்தது.
முகாமின் தலைவர்கள் லெப்டினன்ட் கர்னல்கள் தினேஷ், பிரகாஷ், மேஜர் செந்தில்குமார் ஆகியோர், 450 இளையோர் என்சிசி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இவர்களுக்கு ராணுவ பாடங்களுக்கான ஆயுத பயிற்சி, வரைபட வாசிப்பு, களப்பணி, ராணுவ பணி. தலைமை பண்பை மேம்ப டுத்தும் திறன் ஆகிய பயிற் சிகள் அளிக்கப்பட்டது. மேலும் அணிவகுப்பு பயிற்சி, பொது பேச்சு, விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை பயிற்சிகள் ஆகியவை அளிக்கப்பட்ட டது. ராணுவத்தில் சேர்வ தற்கான அனைத்து வழி முறைகளையும் விரிவாக எடுத்துரைத்தனர்.மாணவர் களுக்கு பல்வேறு திறன்கள் மற்றும் ஒழுக்க கட்டுப்பாடு. தலைமை பண்பு, தேச பக்தி. சமுதாய அக்கறை போன்ற பல்வேறு திறன்களையும் மாணவர்கள் உணர வைக் கும்நோக்குடன் இப்பயிற்சி அமைந்தது.