நெடு மதுரை விஏஓ விற்கு குறுஞ்செய்தியில் கொலை மிரட்டல்
மதுரை அருகே கிராம நிர்வாக அலுவலரின் தலை வெட்டி எறியப்படும் என குறிச்செய்தி அனுப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை அருகே கிராம நிர்வாக அலுவலரின் தலை வெட்டி எறியப்படும் என குறிச்செய்தி அனுப்பிய மர்ம நபர், காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த விஏஓ சிவகங்கை மாவட்டம் சாரிப்புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சோனை என்பவரது மகன் முருகாண்டி (54), இவர் 12 ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலராக மதுரை மாவட்டத்தின் பல்வேறு தாலுகா கிராமங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில்., திருப்பரங்குன்றம் அருகே உள்ள நெடுமதுரை கிராமத்தில் தற்போது 3 ஆண்டுகளுக்கு மேல் கிராம நிர்வாக அலுவலராக முருகாண்டி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் அவரது whatsapp எண்ணிற்கு புது எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் SC/ST Act வழக்கு குறித்து கருத்து தெரிவித்ததுடன்
"நீங்கள் விஏஓ பதவிக்கு தகுதி இல்லாதவர் உங்கள் தலை வெட்டி எறியப்படும். என்று குறுஞ்செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இச்சம்பம் குறித்து சக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து இரவு பெருங்குடி காவல் நிலையத்திற்கு சென்று பார்த்து தெரிவித்ததற்கு நெடுமதுரை கூட கோவில் காவல் எல்லைக்குட்பட்டு வருவதால் அங்கு சென்று போரடிக்கும்படி தெரிவித்ததை தொடர்ந்து இன்று காலை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்துடன் இணைந்து முருகாண்டி தனது புகாரை காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து திருமங்கலம் சரக துணைக் கண்காணிப்பாளர் வசந்தகுமாரிடம் சென்று புகார் அளித்ததற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் சம்பந்தப்பட்ட அந்த எண் யாருடையது? அந்த நபர் யார்? என்பதை கண்டறிய சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக முருகாண்டி தெரிவித்தார். தூத்துக்குடி சம்பவம் போன்று தனக்கு ஏதும் ஆகி விடக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.