அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்
திருமயத்தில் கோடைகால தண்ணீர்பந்தலில் 3 வது நாளாக அதிமுக சார்பில் நீர் மோர் பாணக்கம் வழங்கப்பட்டது.;
Update: 2024-05-05 08:16 GMT
திருமயத்தில் கோடைகால தண்ணீர்பந்தலில் 3 வது நாளாக அதிமுக சார்பில் நீர் மோர் பாணக்கம் வழங்கப்பட்டது.
பொன்னமராவதி ஒருங்கிணைந்த ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம்சார்பில்,கோடைகால தண்ணீர்பந்தலில் 3 வது நாளாக நீர் மோர் பாணக்கம் தர்பூசணிப்பழம் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகப் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து ஆலோசனை படி பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கோடைக்கல தண்ணீர் பந்தலில் ஒன்றிய கழக செயலாளர்கள் காசிகண்ணப்பன் சரவணன் ஆகியோர் நீர் மோர் பாணக்கம் தர்பூசணிப்பழம் உள்ளிட்ட வற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.