நீட் தேர்வு பயிற்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

சூலூரில் தன் மீது பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்ற நீட் தேர்வு பயிற்சி மாணவர் 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2023-12-22 09:17 GMT

தற்கொலை முயற்சி 

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது மகன் ஸ்ரீ ஆகாஷ்.கடந்த 2021 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த இவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். இந்த நிலையில் மூன்றாவது முறை நீட் தேர்வு எழுதுவதற்காக கோவை சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி விடுதியில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஆகாஷ் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். அப்போது ஆகாஷின் அலறல் சத்தம் கேட்ட சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். உடலில் தீக்காயங்களுடன் ஆகாஷை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடலில் 80% காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆகாஷ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில் கோச்சிங் சென்டரில் நடத்தப்படும் பயிற்சி தேர்வில் மாணவன் ஆகாஷ் குறைவான மதிப்பெண்கள் பெற்ற நிலையில் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக பெற்றோரிடம் மதிப்பெண்களை மாற்றி தான் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக கூறியுள்ளார். இதனை அறிந்த ஆசிரியர்கள் பெற்றோர் கோச்சிங் சென்டருக்கு நேரில் வர வேண்டும் என ஆகாஷிடம் கூறியதால் பெற்றோருக்கு பயந்து இந்த விபரீத முடிவை எடுத்திருக்கக் கூடும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News