நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டி - பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
Update: 2023-11-01 05:20 GMT
தமிழ் வளர்ச்சித்துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதற்கிணங்க தி.மலை மாவட்டத்தில் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் பேச்சுப்போட்டி வருகின்ற 7 ஆம் தேதி அன்று தியாகி அண்ணாமலை மேல்நிலைப் பள்ளியில் பள்ளிமாணவர்களுக்கு முற்பகல் 10.00 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2.00 மணிக்கும் தொடங்கி நடைபெறவுள்ளது. கல்லூரி / பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000/- இரண்டாம் பரிசாக ரூ.3000/- மூன்றாம் பரிசாக ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக தொகை ரூ.2000/- வீதம் வழங்கப்பட உள்ளது பள்ளிப் போட்டி தலைப்புகள் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம் மற்றும் கல்லூரிப்போட்டி தலைப்புகள் சுதந்திரப்போராட்டத்தில் நேரு, பஞ்சசீலக் கொள்கை, நேருவின் வெளியுறவுக் கொள்கை மேற்காணும் தலைப்புகளிலிருந்து போட்டி நாளன்று சுழற்சி முறையில் தலைப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் கல்லூரிக் கல்லூரி இணை இயக்குநர் வாயிலாக அனைத்து கல்லூரிகளுக்கும், முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்