ஆக்கிரமிப்பாளர்களுக்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

நெல்லையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள கடைகள், நிறுவனங்கள் 24 மணி நேரத்திற்குள் தங்களாவே ஆக்கிரமைப்பை சரி செய்யவேண்டும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-01-03 07:40 GMT

ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையையும் நடைபாதையையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் மேற்கூறைகள் ஆகியவற்றை இன்னும் 24 மணி நேரத்துக்குள் தாங்களாகவே முன்வந்து அகற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொருட்களும் திரும்ப வழங்கப்பட மாட்டாது என மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News