நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம்
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்து மாசுபட்டு வருகிறது, கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.எ.கனி தலைமையில் மேலப்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அன்வர்ஷா வரவேற்புரை ஆற்றினார்.கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா, புகாரி சேட், பாளை மஜீத் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் மற்றும் மாடுகளின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் விதத்தில் மாநகர ஆணையாளர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்து மாசுபட்டு வருகிறது. எனவே கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலப்பாளையம் நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய தார் சாலைகளில் அமைத்த வேக தடைகள் மீது வர்ணம் பூசப்பட வேண்டும்.குண்டும் குழியுமாக உள்ள பழைய பேருந்து நிலைய சாலைகள் சீரமைக்க வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகளாக தியாகராஜர் நகர் இரயில்வே மேம்பால பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.நெல்லை மாநகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக பணிகளுக்கு செல்லும் காலை நேரத்தில் நெருக்கடி ஏற்படுகிறது. காட்சி பொருளாக காட்சி அளிக்கும் தியாகராஜன் நகர் மேம்பால பணியை விரைந்து முடிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.கூட்டத்தில் பகுதி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் அரசடி மீரான்,சாத்தை நிஜாம்தீன், சேக் முகம்மது, பயாஸ், ஜெய்லானி, சிராஜ்தீன், அன்சாருதீன், பக்கீர் மைதீன், கலந்து கொண்டனர்.இறுதியாக மாவட்ட செயலாளர் அலாவுதீன் நன்றி உரை ஆற்றினார்.