பல்லாங்குழியாக மாறிய நெல்வாய் கூட்டுச்சாலை
Update: 2023-11-26 08:11 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்- புக்கத்துறை சாலையில், நெல்வாய் கூட்டுச்சாலை உள்ளது. ஆலஞ்சேரி, ரெட்டமங்கலம், வளத்தோடு, தோட்டநாவல், சடச்சிவாக்கம் குண்ணவாக்கம் உள்ளிட்ட கிராம வாசிகள், இச்சாலையை பயன்படுத்தி, உத்திரமேரூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த கிராமங்களில் இருந்து, நெல்வாய் நோக்கி செல்லும் சாலையில், நெல்வாய் கூட்டுச்சாலை அருகே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்தான பள்ளத்தால் வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், மழை நேரங்களில் இந்த பள்ளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் தவிக்கின்றனர். எனவே, நெல்வாய் கூட்டுச்சாலை பகுதியில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளத்தை சீர்செய்து, விபத்து அபாயத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.