தளி அருகே 120 கிலோ காப்பர் கம்பி திருடிய மர்ம நபர்களுக்கு வலை
தளி அருகே 120 கிலோ காப்பர் கம்பி திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-15 14:28 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜவளகிரி- பாலதொட்டனப்பள்ளி சாலை ஓரம் இருந்த மின்சாரத் துறைக்கு சொந்தமான ட்ரான்ஸ்பார்மர் உடைத்து அதில் இருந்த 120 கிலோ காப்பர் கம்பியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் மின் வாரிய உதவி பொறியாளர் பெனிதா ஆண்டனி மேரி அளித்த புகாரின் அடிப்படையில் தளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.