நாமக்கல்லில் பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு பூஜையுடன் புதுக்கணக்கு துவக்கம் !

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பல்வேறு நிறுவனத்தினர் தங்களின் பில் புக் மற்றும் கணக்கு நோட்டை வைத்து சிறப்பு வழிபாடு செய்து, புதுக்கணக்கை துவக்கினர்.;

Update: 2024-04-01 09:18 GMT

நாமக்கல்லில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் நடப்பாண்டு (2024-25) வர்த்தகத்தை நாமக்கல் நாமகிரிதாயார் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து துவக்கினர். நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நாமகிரித்தாயார், நரசிம்மர் கோயில் மற்றும் 18 அடி உயர ஒரே கல்லில்லான ஆஞ்நேயர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்,

Advertisement

இந்நிலையில் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் முட்டை ஏற்றுமதி நிறுவனங்கள், கோழிப்பண்ணைகள், தனியார் வங்கிகள் மற்றும் கனரக/இலகுரக வாகன டீலர்கள், பெட்ரோல் பங்க்குகள், லாரி தொழில் சார்ந்த அனைத்து நிறுவனங்களில் ஏப்ரல் முதல் நாளான இன்று (01-04-2024) புதுக்கணக்கு துவங்கினர். அவ்வாறு கணக்கு துவங்கும் பல்வேறு நிறுவனங்கள், நாமக்கல் நாமகிரி தாயார், நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து சுவாமி பாதத்தில் தங்கள் நிறுவனத்தின் பில் புக் மற்றும் கணக்கு நோட்டை வைத்து சிறப்பு வழிபாடு செய்து, நடப்பாண்டின் புதுக்கணக்கை துவங்கினர்.

இதனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நாமக்கல்லில் உள்ள அனைத்து பிரிண்டிங் பிரஸ் மற்றும் ஸ்டேஷனரி கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வந்து சென்றனர், மேலும் அங்கு பரபரப்பான விற்பனை நடைபெற்றதை காணமுடிந்தது.

Tags:    

Similar News