நோட்டில் உ போட்டு புதிய கணக்கு தொடக்கம்
ஏப்ரல் 1ஆம் தேதி முன்னிட்டு திண்டுக்கலில் வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள் புது கணக்கை துவக்கினர்.
Update: 2024-04-01 11:54 GMT
ஏப்ரல் 1ஆம் தேதி முன்னிட்டு திண்டுக்கலில் புது கணக்கு துவக்கப்பட்டது. வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி அன்று புது கணக்கு துவங்குவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டு கணக்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி துவங்கி மார்ச் 31ஆம் தேதி முடிவடைகிறது. இது ஆண்டுகணக்காக கருதப்படுகிறது. இந்த துவக்க நாள் ஏப்ரல் 1ஆம் தேதி தங்கள் கணக்குகளை வனிக நிறுவனங்கள் எடுத்து துவங்கும்.
அப்போது உ போட்டு நோட்டில் தங்கள் கணக்குகளை துவங்கினார்கள். பின்பு வெள்ளை விநாயகர் கோயில் கணக்கு புத்தகங்களை வைத்து வழிபாடு செய்தனர். அந்த புத்தகங்களுக்கு மலர் தூவி அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. வருமானம் பெருகவும், வியாபாரம் செழிக்கவும் அனைவரும் வழிபட்டனர். புதுக்கணக்கு துவக்கத்தை முன்னிட்டு வெள்ளை விநாயகர் கோயில்களில் திராளானோர் வழிபாடு செய்தனர்.