பந்தநல்லூரில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு புதிய பேருந்து சேவை

பந்தநல்லூரில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சி, மற்றும் சென்னை, மார்க்கத்திற்கு புதிய பேருந்து சேவையை அரசு தலைமை கொறடா துவக்கி வைத்தார்.

Update: 2024-03-02 05:00 GMT

திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்கும், பந்தநல்லூர் இருந்து சென்னைக்கும் இப்பகுதிக்கு புதிய பேருந்து வசதி வேண்டுமென நீண்ட நாட்களாக பொதுமக்கள் பலரும் அரசு தலைமை கொறடா கோவி செழியனிடம், கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை 9 நவக்கிரக கோவிலுக்கு செல்வதற்காக போக்குவரத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர், வருகை தந்து பேருந்து சேவை தொடக்கி வைத்தார்.

அப்போது அரசு தலைமை கொறடா கோவி செழியன், பந்தநல்லூர் பகுதிக்கு 2 புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்குமாறு கோரிக்கை விடுத்தார். கோரிக்கை ஏற்று போக்குத்துறை அமைச்சர் புதிய பேருந்து சேவையை தொடக்குமாறு அரசு போக்குவரத்து கழக மேலான் இயக்குனரிடம் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பந்தநல்லூர் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு புதிய பேருந்து சேவையை மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஆகியோர் புதிய பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதில் அரசு போக்குவரத்து கழக மேலான் இயக்குனர் மகேந்திர குமார், தொமுச தலைவர் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் கோ.க அண்ணாதுரை, மிசா மனோகரன், உதயச்சந்திரன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜி கே எம் ராஜா, மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், மாவட்ட பிரதிநிதி பாலகுரு, மாவட்ட ஊராட்சிகள் உறுப்பினர் இளவரசி சின்னசாஷி, ஒன்றிய அவைத் தலைவர் ஜெயபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் நளினிசண்முகவேல், ஒன்றிய துணை செயலாளர் சாமிநாதன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News