புதிதாக கட்டப்பட்ட நற்கருணை ஆராதனை சிற்றாலய திறப்பு விழா
பாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நற்கருணை ஆராதனை சிற்றாலயம் திறப்பு விழாவுடன் முப்பெரும் விழா நடைபெற்றது
பெரம்பலூர் அடுத்துள்ள குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில், புனித யோசேப்பு ஆலய வளாகத்தில், புதிதாகக் கட்டப்பட்ட நற்கருணை ஆராதனை சிற்றாலயம் மற்றும் புனித லூர்து அன்னை கெபி புனிதப்படுத்தும் விழா மற்றும் பங்கு பணியாளர்களின் குருத்துவ வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழா அக்டோபர் 28ஆம் தேதி மாலை நடைபெற்றது.
இதில்புனித லூர்து அன்னை கெபி புனித படுத்துதல், கல்வெட்டு திறப்பு பலிபீடம் புனித படுத்துதல், நற்கருணை ஆராதனை ஆலயம் புனித படுத்துதல், இடைவிடா இறைவேண்டலின் மெழுகுவர்த்திகள் ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றைக் குடந்தை கோட்டாறு மரை மாவட்டங்களின் முன்னாள் ஆயர் ரெமிஜியுஸ், மற்றும் பாலக்காடு சுல்தான்பேட்டை ஆயர் பீட்டர் அபீர், சேலம் மதுரை மாவட்டம் ஆயர் அருள் செல்வம் இராயப்பன் ஆகியோர் புனிதபடுத்தி சிறப்பு திருப்பலி நடத்தி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மேதகு ஆயர்கள், பங்குப் பணியாளர்கள், முன்னாள் பங்குப் பணியாளர்கள், பெரம்பலூர் மறை மாவட்ட அருள்பணியாளர்கள், கிராம பங்குப் பணியாளர்கள் அருட் சகோதரிகள், காரியஸ்தர்கள், கிராம பங்கு மக்கள் பலர் கலந்து கொண்டனர்.