மதுரை அழகர் கோயிலில் புதிய கமிஷனர் பதவியேற்பு
மதுரை கள்ளழகர் கோவிலின் புதிய ஆணையராக இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையராக இருந்த செல்லத்துரை பொறுப்பேற்று கொண்டார்.;
Update: 2024-02-02 05:45 GMT
துணைக்கமிஷனர் ராமசாமி
இந்து அறநிலையத்துறை மதுரை மண்டல இணைக் கமிஷனராக இருந்த செல்லத்துரை நேற்று கூடுதல் பொறுப்பாக கள்ளழகர் கோயில் துணைக் கமிஷனராக பொறுப்பேற்றார். இவரிடம் முன்னாள் துணைக்கமிஷனர் ராமசாமி பொறுப்புகளை ஒப்படைத்தார். முன்னதாக பணியாளர்கள் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. இதில் கோயில் பட்டாச்சாரியார்கள் சார்பில் ராமசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யப்பட்டது.