புதிய சர்ச்சை : தேர்தல் அதிகாரிகளிடம் முகவர்கள் சரமாரி கேள்வி

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் 2 வாக்குசாவடியில் மாதிரி ஓட்டுப்பதிவை அழிக்காமல் வாக்குப்பதிவு நடத்தியது ஏன்? என்று தேர்தல் அதிகாரிகளிடம், முகவர்கள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர்.

Update: 2024-06-02 03:05 GMT

ஆட்சியர் அலுவலகம் 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம்தேதி நடந்தது. இதில் 66.68 சதவீத வாக்குகள் பதிவானது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மொத்த வாக்காளர் 14,58,430. இதில் 9,75,468 வாக்குகள் பதிவாகின. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தூத்துக்குடி அரசு பொறியியல் கல் லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4ம்தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 2 மாதிரி வாக்குசாவடி ஓட்டுப்பதிவை அழிக்காமல் தேர்தல் நடந்ததாக புகார் எழுந்தன. இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முகவர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 2 மாதிரி வாக்குசாவடி ஓட்டுப்பதிவை அழிக்காமல் ஓட்டுபதிவு நடந்ததாக முகவர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்த தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வாக்குபதிவின் போது திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி 149வது வாக்குசாவடி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொதியில் 28வது வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவு அழிக்காமல் தொடர்ந்து தேர்தல் நடைபெற்றதாக முகவர்கள் புகார் தெரிவித்தனர். அதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அந்த 2 வாக்குசாவடியில் பதிவான வாக்குகள் கடை சியில் எண்ணப்படும். 17 சி படிவத்தில் தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கை எடுத்துக் கொள்ளப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News