அரசுப் பள்ளியில் புதிய கலாச்சார மன்றம் துவக்கம்

சங்ககிரி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய கலாச்சார மன்றம் துவக்க விழா நடந்தது.

Update: 2024-02-09 16:25 GMT

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவண்ண்கவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு கீழ் செயல்படும் கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் புதுதில்லி வழிகாட்டுதல் படி பள்ளியில் தீரன் சின்னமலை கலாச்சார மன்ற மன்ற தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

சங்ககிரி வட்டார கல்வி அலுவலர் அன்பொளி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை பள்ளி தலைமையாசிரியர் வசந்தாள் வரவேற்றார். சங்ககிரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தங்கமுத்து புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலாச்சார மன்றத்தையும், இந்திய கலாச்சார மற்றும் கலைகள் குறித்த கண்காட்சியையும் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்பித்தார். புதுதில்லியில் உள்ள மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு கீழ் செயல்படும் கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவரும், தீரன் சின்னமலை கலாச்சார மன்றத்தின் ஒருங்கிணைப்பாளருமான பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா. முருகன், கலாச்சார மன்றத்தின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கிப்பேசினார். இதில் ஆசிரியர்கள் சீனிவாசன், சித்ரா, ரமா மகேஸ்வரி , மாணவ மாணவிகள், தேவண்ணகவுண்டனூர் கிளை நூலகத்தின் நூலகர் குமரேசன்,சமூக ஆர்வலர் நடராஜ், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News