புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை!

ஆரணியில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உதவி ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2024-04-13 12:05 GMT

தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தாய் வீட்டுக்கு செல்ல கணவன் மறுத்ததால் திருமணமான 4-வது மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 4 மாதமே ஆவதால் ஆரணி உதவி ஆட்சியர் எஸ்.பாலசுப்பிரமணியன் விசாரணை நடத்தி வருகிறார்.புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News