புதிய பாரத எழுத்தறிவு திட்டத் தேர்வு 820 பேர் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத் தேர்வு 820 பேர் பங்கேற்றனர்.
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, எண் அறிவு கற்பிக்கப்படுகிறது. இதற்காக அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
ஆசிரியர்கள் எழுதப் படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து அவருடைய விருப்பத்தின் பேரில் கற்றுத் தருகிறார்கள். இந்த திட்டத்தின் வெள்ளகோவில் பகுதியில் 900க்கு மேற்பட்டோர் படிக்கிறார்கள். இவர்களுக்கு வெள்ளகோவில் வட்டாரத்தில் 80 மையங்களில் நடத்தப்பட்ட தேர்வில் 820 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார். செம்மாண்டம் பாளையம் அரசு பள்ளி தேர்வு மையத்தை திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் பாலசிவகுமார் திட்டத்தண்ணார்வலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) மீனாட்சி, ஆசிரியர் பயிற்றுனர் சுமதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.