கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்

கிளாம்பாக்கத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரயில் நிலையம் அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் துவங்கியுள்ளது.

Update: 2024-01-04 06:43 GMT

கிளாம்பாக்கத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரயில் நிலையம் அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் துவங்கியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்,வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து கிளாம்பாக்கத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரெயில் நிலையம் அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ரெயில்வே வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்ய ரெயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், அடுத்தடுத்து ஆகும் செலவை கணக்கில் கொண்டு மற்ற தொகைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓராண்டுக்குள் பணிகளை நிறைவு செய்யும் வகையில் இந்த வாரத்தில் ரெயில்வே வாரியம் டெண்டர் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக ரெயில்வே திட்டங்களுக்கு ரெயில்வே துறை நிதி ஒதுக்கும் நிலையில், தமிழ்நாட்டிற்கான தேவை என்பதால் சிஎம்டிஏ நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News