புதிய ரேஷன் கடை திறப்பு
வடுகப்பட்டி ஊராட்சியில் ரூ.8.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை எம்எல்ஏ., வெங்கடேசன் திறந்து வைத்தார்.
Update: 2024-03-02 09:48 GMT
அலங்காநல்லூர் அருகே வடுகப்பட்டி ஊராட்சியில் ரூ.8.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை திறப்பு - எம்எல்ஏ வெங்கடேசன் திறந்து வைத்தார் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வடுகப்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலை கடையை எம்.எல்.ஏ வெங்கடேசன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் அன்புமுத்து, உட்பட பலர் கலந்து கொண்டனர்.