முதுமலை வனப்பகுதி அருகே புத்தாண்டு கொண்டாட புதிய கட்டுப்பாடு
முதுமலை வனப்பகுதி அருகே புத்தாண்டு கொண்டாட புதிய கட்டுப்பாடுகளை விதித்த வனத்துறை.
By : King 24x7 Website
Update: 2023-12-31 17:10 GMT
நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் சுற்றுலா நகரமான நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். குறிப்பாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்கள் இருந்தும், தமிழகத்தை சார்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகை புரிந்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக, கேரள மாநிலங்களை இணைக்கக்கூடிய நீலகிரி மாவட்டத்தின் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மசனகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் புத்தாண்டை கொண்டாட வனத்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அவைகளுக்கு இடையூறு செய்யும் விதமான செயல்களில் ஈடுபடக்கூடாது, தங்கும் விடுதிகளில் இரவு 9 மணிக்கு மேல் யாரும் வெளியே செல்லக்கூடாது, அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது, அதேபோல் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கக்கூடாது என விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.