சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் புதிய தொழில்நுட்பத்தில் ‘ஸ்லிட் லேம்ப்’ தொடக்கம்!

புதிய தொழில்நுட்பத்தில் ‘ஸ்லிட் லேம்ப்’ தொடக்கம்

Update: 2024-06-15 06:22 GMT

ஸ்லிட் லேம்ப் 

சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கண் ஒளியியல் பிரிவு ஆய்வகத்தில் மேம்பட்ட புதிய தொழில்நுட்பத்தில் ஸ்லிட் லேம்ப் நிறுவப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்ப ஸ்லிட் லேம்பை திறந்து வைத்தார். இதுகுறித்து துறையின் டீன் செந்தில்குமார் கூறுகையில், எங்கள் துறையில் கண் ஒளியியல் பிரிவில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கிலும், கற்பித்தலில் புதிய மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஸ்லிட் லேம்ப் உபகரணம் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் கற்றல் முறையை எளிமைப்படுத்தி மருத்துவம் சார்ந்த பயிற்சியை மேம்படுத்த முடியும். இவ்வாறான பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் துறை சார்ந்த தொழிற்துறை திறனின் சமீபத்திய வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுவதோடு சிறந்த வேலைவாய்ப்பினை பெறவும் வழிவகுக்கும், என்றார். இதற்கான ஏற்பாடுகளை துறையின் கண் ஒளியியல் பிரிவின் பொறுப்பாளர் தமிழ்சுடர் மற்றும் உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News