சங்ககிரியில் புதிய பணிகள் தொடக்கம்

சங்ககிரியில் எம் பி நிதியிலிருந்து 32 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற மற்றும் புதிய பணிகள் தொடங்கபட்டுள்ளது

Update: 2024-02-27 11:07 GMT

புதிய பணிகள் தொடக்கம் 

சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் AKP சின்ராஜ் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டபணிகளுக்கு பூமி பூஜை செய்தும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமையல் கூடம் கட்டுமான பணிகளுக்கும் வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் AKP சின்ராஜ் புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்தும் முடிவுற்ற பணிகளுக்கு ரிப்பன் வெட்டியும் தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

அப்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News