திருமணமான புதுப்பெண் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே பிரியா (20) என்ற இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை;
By : King 24x7 Angel
Update: 2024-02-15 08:42 GMT
திருமணமான புதுப்பெண் தற்கொலை
கோபால்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த முருகேசன் மகள் பிரியா (20). இவருக்கும் தேனி மாவட்டம், கூடலூர் 8வது வார்டு சவடம்மன் கோயில் தெருவை சேர்ந்த சிவசாமி மகனான டூவீலர் மெக்கானிக் கமலக்கண்ணனுக்கும் கடந்த பிப்.11ம் தேதி திருமணம் நடந்தது. பிரியா கல்லூரியில் படித்து வந்த நிலையில் அவருக்கு விருப்பமில்லாமல் இத்திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மறுவீடு அழைப்புக்காக நேற்று முன்தினம் புதுமண தம்பதியை திண்டுக்கல் அழைத்து வந்தனர். இரவு கணவன், மனைவி தனித்தனியாக தூங்க சென்றுள்ளனர். நேற்று காலையில் பார்த்த போது பிரியா அவரது அறையில் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.